Pages

Total Pageviews

Monday, February 7, 2011

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்னை





1)  முதன்முதலில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியது பிரதமர்தான். சட்ட அமைச்சகமும், நிதியமைச்சகமும் பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், நிதானமாக, எல்லா பரிமாணங்களையும் சிந்தித்தபின் முடிவெடுக்கும்படி, அன்றைய தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை எச்சரித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.
2) பிரதமரின் எச்சரிக்கைக் கடிதத்துக்கு அமைச்சர் அளித்த விளக்கம் மரியாதைக் குறைவாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே உரைக்கின்றபோது, பிரதமர் தனது அமைச்சரின் மரியாதைக் குறைவான பதிலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது ஏன், எதற்காக ?









3) உரிமம் பெற்ற 122 நிறுவனங்களில் 85 உரிமம் பெற குதி ல்லை.உரிமம் அளிக்கப்பட்ட விதம், உரிமம் பெற்ற நிறுவனங்களின் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது.

4)  உரிமம் பெற்ற நிறுவனங்கள்  தங்களது உரிமத்தை மறுவிற்பனை செய்திருப்பது, முறைகேடு நடந்திருப்பதை பட்டவர்த்தனமாகத் தெளிவுபடுத்துகிறது
a) Swan paid Rs. 1,537 crore and sold 45% stake to Etisalat for a profit of Rs. 4, 730 crore.
b)Unitech paid Rs. 1,661 crore for its license, and sold 60% stake to Telenor for Rs. 6,200 crore.

5)  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த இழப்புக்கு அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசாவும், தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்த சித்தார்த்த பெஹுராவும், அமைச்சரின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சண்டோலியாவும் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதும், தொடர்ந்து விசாரணைக்கு உள்படுத்தி அவர்களிடமிருந்து மேலும் பல உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதும் தேவையான நடவடிக்கைகள். 

6) கைது வெறும் தொடக்கம்தான். இதன் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டும் போதாது. இந்த ஒதுக்கீட்டால் உரிமம் பெற்றவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். அடைந்த லாபத்தை அரசு கைப்பற்றி கருவூலத்தில் சேர்க்க வேண்டும்  

7)தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும் அனுமதி வழங்கினார்.திகார் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அங்கு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.ரத்தி அடைக்கப்பட்டுள்ள அறையில் அடைக்கப்பட்டார் 

8)2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஆ. ராசா, தில்லி திஹார் சிறையில் உள்ளார். நீதிமன்ற விசாரணையின்போது, இதர கைதிகளோடு ஒரே வேனில் அவர் அழைத்து வரப்படுகிறார். இதைத் தவிர்க்க தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும்  தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆ. ராசா நேற்று திங்கள்கிழமை28.02.11 மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி, வழக்கை இன்று செவ்வாய்க்கிழமைக்கு01.03.2011 தள்ளி வைத்திருந்தார். இன்று 01.03.11அதற்கான அனுமதியை அவர் வழங்கினார்
9) 2-ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக மார்ச் 31-க்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  
10)2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், ""முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் மீது  02.04.2011 சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.இந்த நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
80,000 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு காரணமாக மிக அதிக அளவுக்குப்பணப் பயன் அடைந்த நிறுவனம் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது
9 பேர் மீது குற்றப்பத்திரிகை -
1)முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா
2)தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா
3)ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
4)யூனிடெக் வயர்லெஸ்
5)ஸ்வான் டெலிகாம்
6)டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் கோயங்கா
7)யூனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா
8)ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா
9)ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா          
11)2 ஜி வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் வயர்லெஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத்தின் உயரதிகாரிகள் கௌதம் ஜோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகிய 5 பேரும் தில்லி திகார் சிறையில் 20.04.2011புதன்கிழமை அடைக்கப்பட்டனர்.
12)திமுக எம்.பி.யும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் "கூட்டு சதியாளர்' என துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நிராகரித்து அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவெள்ளிக்கிழமை20.05.2011 உத்தரவு பிறப்பித்தார்.கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, பெண் காவலர்கள் அவரைக் கையைப் பிடித்து திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.(2ஜி அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பயனடைந்ததாகக் கூறப்படும் ஷாகித் பல்வாவுக்குச் சொந்தமான டிபி ரியாலிட்டி நிறுவனம், குசேகாவ்ன் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி நிதி அளித்தது தெரியவந்தது.  இதனடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள், 20 சதவீத பங்குதாரரான கனிமொழி, 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகிய மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.  இதன் அடிப்படையில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த மே 6-ம் தேதி கனிமொழி சார்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் வாதாடினார். மேலும் ஆ.ராசாவே முறைகேட்டுக்கு முழுக் காரணம் என்றார் ஜேட்மலானி. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, ஜாமீன் வழங்குவது குறித்த தனது உத்தரவை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மே 14-ம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது, நீதிபதி சைனி ஜாமீன் குறித்த தனது உத்தரவு மே 20-ம் தேதி அறிவிக்கப்படும் என ஒத்திவைத்தார்)

13) கலைஞர் தொலைக்காட்சியின் 20 சதவீத பங்குதாரரான கலைஞர் டி.வி. மேலாண்மை இயக்குநர் சரத்குமார்இந்த ஊழல் குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போதும் குற்றம்சாட்டப்பட்ட (கனிமொழி, சரத்குமார்)இருவருக்கும் ஜாமீன் அளித்தால், கலைஞர் தொலைக்காட்சியின் ஊழியர்களின் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது எனஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நிராகரித்து நீதிமன்றக் காவலுக்கு உத்தரவு பிறப்பித்தார்












14) 2ஜி வழக்கில், சி.பி.ஐ.,யால் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கடந்த 20ம் தேதியன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று  23.05.2011 கனிமொழி டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார் 

15) தில்லி திகார் சிறையில் உள்ள தனது மகள் கனிமொழியை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை23.05.2011 மாலையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார். 












16) ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் வயர்லெஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத்தின் உயரதிகாரிகள் கௌதம் ஜோஷி ஆகிய 3 பேரின் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்து 23.05.2011












 17) 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் கோரி திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்த மனு தொடர்பாக சிபிஐக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 30-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கனிமொழி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
 18) திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்தஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல்(30.05.2011 திங்கள்கிழமை) ஒத்திவைத்தது. 

 டில்லி ஐகோர்ட்ஜாமின் மனு தள்ளுபடி:08.06.2011
19)2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் இன்று 08.06.2011 தீர்ப்பளித்துள்ளது 
 சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி:20.06.2011
20)ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கலைஞர், "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் கடந்த ஒரு மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வி, சவுகான் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் முழுமையாக பதிவு செய்யப்படும் வரை மனுதாரர்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின், சிறப்பு கோர்ட்டிலேயே ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யலாம். தான் பெண் என்பதற்காக, ஜாமின் வழங்க வேண்டும் என கனிமொழி கருதினால், அவரது வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 437ன் கீழ், சட்ட நிவாரணம் பெறலாம். குற்றச்சாட்டுகள் தாக்கலான பின், இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து பார்க்காமல், புது மனுவாக ஏற்று விசாரிக்கும்படி சிறப்பு கோர்ட்டை கேட்டுக்கொள்கிறோம். எனத் தீர்ப்பில் கூறினர்.
21)நீளும் "2ஜி' ஊழல் பட்டியல்: தயாநிதிக்கு பின் சிக்கப்போவது யார்?

No comments:

Post a Comment