Pages

Total Pageviews

Monday, February 21, 2011

பஹ்ரைனில் மன்னராட்சிக்கு எதிராக கிளர்ச்சி

பஹ்ரைன் நாட்டில் சிறுபான்மையாக உள்ள சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம் பிரிவினர் கோரி வருகின்றனர்.(பஹ்ரைனில் பெரும்பான்மை மக்கள் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள்)
 முக்கிய இடங்களில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்





போராட்டக்காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில்14.02.2011/15.02.2011 நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக, பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை17.02.2011 அதிகாலை அந்த சதுக்கத்தை போலீஸôர் சுற்றி வளைத்தனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்
 


 
கிளிர்ச்சியை போலீஸ் மூலம் அடக்க அரசு தரப்பினர் முயன்று வருகின்றனர். போலீஸôருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


கிளர்ச்சியை ஒடுக்க தலைநகர் மனாமாவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. . அமைதியான முறையில் போராடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் அலி சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 


அமைதியாக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை பயன்படுத்த வேண்டாம் என்று பஹ்ரைன் ஆட்சியாளர்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.


.பக்ரைனில், மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில்

தலைநகர் மனாமாவில் உள்ள பேர்ள் சதுக்கத்தை ராணுவம் ஆக்கிரமித்தது. இந்நிலையில், இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா, பேச்சுவார்த்தைக்கு வரும்படி நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் மன்னரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை பரிசீலிப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது
.எதிர்க்கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட விதமாக, சதுக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அங்கு மக்கள் குவிய ஆரம்பித்தனர்.



எனினும், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், மக்கள் கூட்டத்தைக் கலைக்கும் விதத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, ரப்பர் குண்டு வீச்சு என தாக்குதல் நடத்தினர்


.சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து விட்டதால், வேறு வழியின்றி போலீசார் அங்கிருந்து வெளியேறினர்.







No comments:

Post a Comment