Pages

Total Pageviews

Wednesday, March 2, 2011

தமிழக சட்டசபை தேர்தல் 2011

.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, தமிழகம், அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை 01.03.2011 வெளியிட்டார்




தமிழக சட்டசபையின் பதவிக் காலம், 16.05.2011 முடிகிறது.அதற்குள் புதிய அரசு அமைந்து, சட்டசபை துவக்கப்பட வேண்டும்.இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது


தேர்தலுக்கான அறிவிக்கை வரும் (மார்ச்) 19ம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே, அன்று முதல், வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
மனுக்கள் தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி கடைசி நாள். வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் - 4,59,50,620
ஆண்வாக்காளர்கள்  - 2,30,86,295
பெண்வாக்காளர்கள் - 2,28,63,481
 அரவாணிகள் 844 பேரும் உள்ளனர்


மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் முடிந்தது : 26.03.2011
தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளில் மொத்தம், 4,280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை (2011):

பெண்களின் தாலிக்கு அரைபவுன் தங்கம்

குடும்ப பெண்களுக்கு ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் 

பெண்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்

பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும், 25 ஆயிரம் ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கு கிராம் தங்கம் (அரை பவுன்) மணப்பெண்ணின் திருமாங்கல்யம் (தாலி) செய்ய இலவசமாக வழங்கப்படும். இளநிலை மற்றும் டிப்ளமோ படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை, 50 ஆயிரம் ரூபாயும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படும்.

குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்

சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் 5.6 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு நான்கு ஆடு இலவசமாக வழங்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடை, காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்

இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.

அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட்டுத்தொகை ஒன்பது வரும் வகையில் 54 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



தி.மு.க, தேர்தல் அறிக்கை  மார்ச் 19-ம் தேதி வெளியிடப்பட்டது

அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி.இதன்மூலம் தமிழகத்திலே உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்.ஓய்வுபெறும் வயதான 58 வயதிலிருந்தே இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படும்.

முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்படும். 

 கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகும்

மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்களாக அதிகரிக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கடன் ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும்பள்ளி மாணவர்களுக்கு இனி 3 சீருடைகள்.  கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் விபத்துகளுக்கும் இனி அமல்   

அரசுக் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் (ஜாதி) பாகுபாடின்றி இலவச மடிக் கணினி வழங்கப்படும்

இலவச வீடு கட்ட நிதி ரூ.1 லட்சம்: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்க இப்போது ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும், இலவச கலர் டி.வி.க்களும் வழங்கப்படும்.

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் 
1)பார்வர்டு பிளாக் கட்சி - 1 - உசிலம்பட்டி தொகுதி
2)அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - 1 - திருச்சுழி தொகுதி
3)இந்திய குடியரசு கட்சி - 1 - (கே.வி.குப்பம், தனி)
4) மனித நேய மக்கள் கட்சி - 3 - திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம்
5)தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை  - 1 - பரமத்திவேலூர் தொகுதி
6)சமத்துவ மக்கள் கட்சி - 2 - தென்காசி, நாங்குநேரி
 7) தே.மு.தி.க.,விற்கு 41 இடங்கள்
8) மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள்
 9)இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள்

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள்
1) தி.மு.க. போட்டியிடும்  தொகுதிகள்  -  119
2) காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் - 63
3) பாமக போட்டியிடும் தொகுதிகள்  - 30 
4) விடுதலைச் சிறுத்தைகள்  போட்டியிடும்  தொகுதிகள் - 10
5) கொமுக  போட்டியிடும் தொகுதிகள் - 7
6) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும்  தொகுதிகள்  - 3
7) மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதி  - 1 - சிதம்பரம்
8) பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடும் 1 தொகுதி - 1 -பெரம்பூர்

தேர்தலில் போட்டியில்லை - மதிமுக  
அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொகுதி பங்கீட்டில் நடத்தப்பட்ட விதம் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும்,கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜெயா, கருணாநிதி வேட்பு மனு தாக்கல்
கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூரில்  வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதாவும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  


ஜெயலலிதா, விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இன்று 07.04.2011மாலை 5 மணிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

திமுக தேர்தல் குழு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்எம்எஸ்
ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் பதிவாகும் வாக்குகள் குறித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 10, 12, மதியம் 2, 4 மணிகளில் தகவல் தெரியும். 

ஓட்டு சதவீதம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 77. 8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது .அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் - 
(!)வாக்காளர் படத்துடன்கூடிய பூத் சிலிப்புகளைத் தேர்தல் ஆணையமே வழங்கியது
(2) புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் 
(3)தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள்
(4)தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் (4.7 கோடி பேர்) 18 வயது முதல் 29 வயதுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு.இவர்கள் பத்திரிகை படிக்கிறவர்களாகவோ, அல்லது தொலைக்காட்சிகளைப் பார்க்கிறவர்களாகவோ இருக்கிறார்கள்.இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும்,  நாட்டில் நடக்கும் ஊழல்கள் குறித்த செய்திகளும்,தேர்தல் குறித்த செய்திகளும் நிச்சயம்போய்ச்சேர்ந்திருக்கிறது.இதற்கான முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பம்தான் -ஊடகம்


யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் எண்ணிக்கை - 49-O
சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.

தொகுதி வாரியாக பதிவான ஓட்டு சதவீதம்

திருவள்ளூர் மாவட்டம் – 75.79

1) கும்மிடிப்பூண்டி – 83.25
2) பொன்னேரி – 80.37
3) திருத்தணி – 80.36
4) திருவள்ளூர் – 81.85
5) பூந்தமல்லி – 79.13
6) ஆவடி – 71.84
7) மதுரவாயல் – 70.60
8)
அம்பத்தூர் – 71.04
9) மாதவரம் – 70.10
10) திருவொற்றியூர் – 74.36

சென்னை மாவட்டம் – 68.02

11) ஆர்.கே.நகர் – 72.40
12) பெரம்பூர் – 69.71
13) கொளத்தூர் – 68.25
14) வில்லிவாக்கம் – 67.61
15) திருவிக நகர் – 68.31
16) எழும்பூர் (தனி) – 68.07
17) ராயபுரம் – 70.64
18) துறைமுகம் – 63.65
19) சேப்பாக்கம் – 69.29
20) ஆயிரம்விளக்கு – 66.83
21) அண்ணாநகர் – 66.74
22) விருகம்பாக்கம் – 67.82
23) சைதாப்பேட்டை – 70.33
24) தி.நகர் – 66.46
25) மயிலாப்பூர் – 65.16
26) வேளச்சேரி – 66.84

காஞ்சிபுரம் மாவட்டம் – 76.00

27) சோழிங்கநல்லூர் – 67.68
28) ஆலந்தூர் – 69.86
29) ஸ்ரீபெரும்புதூர் (தனி) – 81.82
30) பல்லாவரம் – 72.15
31) தாம்பரம் – 69.86
32) செங்கல்பட்டு – 73.91
33) திருப்போரூர் – 82.73
34) செய்யூர் (தனி) – 81.68
35) மதுராந்தகம் (தனி) – 81.68
36) உத்திரமேரூர் – 86.32
37) காஞ்சிபுரம் – 80.51

வேலூர் மாவட்டம் – 79.86

38) அரக்கோணம் (தனி) – 78.89
39) சோளிங்கர் – 84.92
40) காட்பாடி – 80.14
41) ராணிப்பேட்டை – 79.57
42) ஆற்காடு – 83.54
43) வேலூர் – 73.77
44) அணைக்கட்டு – 78.88
45) கே.வி.குப்பம் (தனி) – 80.16
46) குடியாத்தம் (தனி) – 76.96
47) வாணியம்பாடி – 78.89
48) ஆம்பூர் – 77.74
49) ஜோலார்பேட்டை – 81.82
50) திருப்பத்தூர் – 82.13

கிருஷ்ணகிரி மாவட்டம் – 81.09
51) ஊத்தங்கரை (தனி) – 81.87
52) பர்கூர் – 82.14
53) கிருஷ்ணகிரி – 79.80
54) வேப்பனஹள்ளி – 85.52
55) ஓசூர் – 74.77
56) தளி – 84.02
தர்மபுரி மாவட்டம் – 81.21
57) பாலக்கோடு – 86.65
58) பென்னாகரம் – 82.86
59) தர்மபுரி – 77.48
60) பாப்பிரெட்டிபட்டி – 80.52
61) அரூர் (தனி) – 79.33
திருவண்ணாமலை மாட்டம் – 83.80
62) செங்கம் (தனி) – 84.25
63) திருவண்ணாமலை – 80.71
64) கீழ்பென்னாத்தூர் – 84.40
65) கலசப்பாக்கம் – 86.54
66) போளூர் – 85.11
67) ஆரணி – 83.53
68) செய்யாறு – 84.78
69) வந்தவாசி (தனி) – 81.51
விழுப்புரம் மாவட்டம் – 81.80
70) செஞ்சி – 81.50
71) மயிலம் – 82.37
72) திண்டிவனம் (தனி) – 80.92
73) வானூர் (தனி) – 80.83
74) விழுப்புரம் – 82.04
75) விக்கிரவாண்டி – 81.37
76) திருக்கோவிலூர் – 80.79
77) உளுந்தூர்பேட்டை – 83.24
78) ரிஷிவந்தியம் – 82.75
79) சங்கராபுரம் – 81.69
80) கள்ளக்குறிச்சி – 82.00
சேலம் மாவட்டம் – 82.05
81) கெங்கவல்லி (தனி) – 81.53
82) ஆத்தூர் (தனி) – 80.53
83) ஏற்காடு (தனி) – 85.25
84) ஓமலூர் – 83.03
85) மேட்டூர் – 79.46
86) எரப்பாடி – 85.36
87) சங்ககிரி – 86.00
88) சேலம் மேற்கு – 79.73
89) சேலம் வடக்கு – 74.23
90) சேலம் தெற்கு – 78.71
91) வீரபாண்டி – 89.07
நாமக்கல் மாவட்டம் – 82.52
92) ராசிபுரம் (‌தனி) – 82.97
93) சேந்தமங்கலம் – 81.35
94) நாமக்கல் – 81.67
95) பரமத்தி வேலூர் – 81.07
96) திருச்செங்கோடு – 81.82
97) குமாரபாளையம் – 86.36
ஈரோடு மாவட்டம் – 81.36
98) ஈரோடு கிழக்கு – 77.49
99) ஈரோடு மேற்கு – 78.98
100) மொடக்குறிச்சி – 81.34
103) பெருந்துறை – 83.81
104) பவானி – 81.64
105) அந்தியூர் – 82.21
106) கோபிசெட்டிப்பாளையம் – 83.29
107) பவானிசாகம் (தனி) – 81.82
திருப்பூர் மாவட்டம் – 78.01
101) தாராபுரம் ( தனி) – 78.86
102) காங்கேயம் – 81.53
112) அவிநாசி ( தனி) – 80.09
113) திருப்பூர் – 74.37
114) திருப்பரூர் ( தெற்கு ) – 72.83
115) பல்லடம் – 77.30
125) உடுமலைப்பேட்டை – 77.98
126) மடத்துக்குளம் – 81.22
நீலகிரி மாவட்டம் – 71.94
108) உதகமண்டலம் – 71.07
109) கூடலூர் ( தனி) – 71.51
110) குன்னூர் – 73.26
கோவை மாவட்டம் – 76.56
111) மேட்டுப்பாளையம் – 80.86
116 ) சூளூர் – 80.10
117) கவுண்டம்பாளையம் – 73.52
118) ‌கோவை வடக்கு – 69.79
119) தொண்டாமுத்தூர் – 75.09
120) ‌கோவை ( தெற்கு) – 71.45
121) சிங்காநல்லூர் – 68.90
122) கிணத்துக்கடவு – 77.98
123) பொள்ளாச்சி – 79.82
124) வால்பாறை (தனி) – 76.56
திண்டுக்கல் மாவட்டம் – 81.55
127) பழநி – 80.70
128) ஒட்டன்சத்திரம் – 85.91
129) ஆத்தூர் – 83.81
130) நிலக்கோட்டை ( தனி) – 78.94
131) நத்தம் – 84.89
132) திண்டுக்கல் – 76.61
133) வேடசந்தூர் – 79.37
கரூர் மாவட்டம் – 86.06
134) அரவக்குறிச்சி – 85.63
135) கரூர் – 83.59
136) கிருஷ்ணராயபுரம் – 86.56
137) குளித்தலை – 88.66
திருச்சி மாவட்டம் – 79.12
138) மனப்பாறை – 79.73
139) ஸ்ரீரங்கம் – 80.95
140) திருச்சி மேற்கு – 74.93
141) திருச்சி கிழக்கு – 75.24
142) திருவெரும்பூர் – 71.94
143) லால்குடி – 83.29
144) மனச்சநல்லூர் – 84.05
145) முசிறி – 81.72
146) துறையூர் ( தனி ) – 81.74
பெரம்பலூர் மாவட்டம் – 81.74
147) பெரம்லூர் ( தனி) – 82.37
148) குன்னம் – 81.74
அரியலூர் மாவட்டம் – 83.91
149)அரியலூர் – 84.73
150)ஜெயங்கொண்டம் – 83.09
கடலூர் மாவட்டம் – 80.75
151) திட்டக்குடி ( தனி) – 79.01
152) விருத்தாச்சலம் – 80.45
153) நெய்வேலி – 81.93
154) பன்ருட்டி – 83.02
155) கடலூர் – 77.77
156 ) குறிஞ்சிப்பாடி – 86.38
157) புவனகிரி – 81.62
158) சிதம்பரம் – 77.36
159) காட்டுமன்னார் கோயில் ( தனி) – 79.23
நாகப்பட்டினம் : 80.25
160 ) சீர்காழி (தனி) – 78.65
161) மயிலாடுதுறை – 76.39
162) பூம்புஹார் – 79.70
163) நாகப்பட்டினம் – 79.24
164) கீழ்வேளூர் (தனி) – 91.89
165 ) வேதாரண்யம் – 77.99
திருவாரூர் – 81.42
166) திருத்துறைப்பூண்டி (தனி) – 80.46
167)மன்னார்குடி – 80.62
168) திருவாரூர் – 82.13
169 ) நன்னிலம் – 82.33
தஞ்சாவூர் மாவட்டம் – 79.97
170) திருவிடைமருதூர் ( தனி)- 80.82
171) கும்பகோணம் – 80.26
172 ) பாபநாசம் – 80.71
173) திருவையாறு – 83.93
174) தஞ்சாவூர் – 73.32
175) ஒரத்தநாடு – 82.07
176) பட்டுக்கோட்டை – 77.67
177 ) பேராவூரணி – 80.97
புதுக்கோட்டை மாவட்டம் – 79.81
178) கந்தர்வகோட்டை – 79.99
179) விராலிமலை – 85.93
180) புதுக்கோட்டை – 78.38
181) திருமயம் – 78.57
182 ) ஆலங்குடி – 81.65
183) அறந்தாங்கி – 74.81
சிவகங்கை மாவட்டம் – 75.59
184) காரைக்குடி – 74.06
185) திருப்பத்தூர் – 79.08
186) சிவகங்கை – 73.45
187) மானாமதுரை – 76.61
மது‌ரை மாவட்டம் – 77.63
188)மேலூர் – 80.02
189) மதுரை கிழக்கு -76.99
190) சோழவந்தான் – 82.90
191 ) மதுரை வடக்கு -72.98
192) மதுரை தெற்கு -75.70
193) மதுரை மத்திய தொகுதி -74.78
194) மதுரை மேற்கு – 74.77
195) திருப்பரங்குன்றம் – 76.13
196) திருமங்கலம் -82.04
197) உசிலம்பட்டி – 80.03
தேனி மாவட்டம் – 79.56
198) ஆண்டிப்பட்டி – 81.92
199) பெரியகுளம் – 78.94
200) போடிநாயக்கனூர் – 81.07
201) கம்பம் – 76.43
விருதுநகர் : 81.45
202)ராஜபாளையம் – 80.09
203) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – 81.10
204 ) சாத்தூர் – 82.18
205) சிவகாசி -80.85
206 ) விருதுநகர் – 78.93
207) அருப்புக்கோட்டை – 83.06
208) திருச்சுழி – 83.91
ராமநாதபுரம் – 70.73
209) பரமக்குடி (தனி) -72.21
210) திருவாடனை – 71.47
211) ராமநாதபுரம் – 70.79
212) முதுகுளத்தூர் – 68.88
தூத்துக்குடி மாவட்டம் – 74.83
213)விளாத்திக்குளம் – 76.05
214) தூத்துக்குடி – 73.66
215) திருச்செந்‌தூர் – 76.52
216) ஹவைகுண்டம் – 75.07
217) ஒட்டப்பிடாரம் – 75.63
218) கோவில்பட்டி – 72.27
திருநெல்வேலி மாவட்டம் : 75.27
219) சங்கரன்கோவில் – 75.50
220) வாசுதேவநல்லூர் – 76.46
221) கடயநல்லூர் – 75.40
222) தென்காசி – 78.64
223) ஆலங்குளம் – 80.68
224) திருநெல்வேலி- 76.58
225) அம்பாசமுத்திரம் – 75.13
226) பாளையங்கோட்டை – 68.22
227) நாங்குனேரி – 74.57
228) ராதாபுரம் -71.00
கன்னியாகுமரி மாவட்டம் – 68.93
229) கன்னியாகுமரி – 75.57
230) நாகர்கோவில் – 69.84
231) கொளச்சல் – 64.13
232)பத்மநாபபுரமம்- 69.98
233) விளவன்கோடு – 69.56
234 ) கிள்ளியூர் – 64.07

 


 ஓட்டு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் 91 இடங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடு
மேற்கு வங்க தேர்தல் முடிந்த பின், அதாவது, வரும் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், அதுவரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.











ஓட்டுப் பெட்டிகள் அறை பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கை மையங்களில், "ஸ்டிராங் அறை' எனப்படும் அறையில் தான், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த அறைக்கு, ஒரு கதவு, ஒரு ஜன்னலுக்கு மேல் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த கதவு அல்லது ஜன்னல், கான்கிரீட் மூலம் மூடப்படும்.

கதவை நோக்கி இரண்டு கேமிராக்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த கேமிராக்கள், "லேப்-டாப்'புடன் இணைக்கப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டர் தன் அறையில் இருந்தபடி, இதை கண்காணிக்க முடியும். இரண்டு சாவிகள் கொண்ட பூட்டு போடப்பட்டிருக்கும். இதன் சாவி அந்தந்த மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.










அஞ்சல் வோட்டு
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸôர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் தொகுதியில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க வாக்கு எண்ணும் நாளான மே 13-ம் தேதி காலை 7 மணி வரை தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பெறுவதற்காக அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களது அலுவலகத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  

No comments:

Post a Comment